வியாழன், 1 ஜூலை, 2010

இராணுவ ஒற்றுமை...


பதினொரு பேர் வரிசையில்.....
ஒன்றாம் தலையில்
ஒன்றி பத்து தலைகள்
பொருந்த ஒன்றாக
நின்றனர்.....
உன் குருதி உறையும்
வரை நீ போராடு ....
உனக்குப்பின்
பத்து தலைகள்.....
தோல்வியில் மடிந்த
உன்னை மேலும்
ஆயுதங்களால்
தாக்கினர்,
ம்ம்... நீ எழுந்து
அவர்களை தாக்கி
விடுவாயோ என்ற பயத்தில்......
பரவாயில்லை,
உன் குருதி ஊர்தியில்
சென்று மக்களுக்கு
குடிநீராகட்டும்......
உனக்கு முன் நான்
வந்திருப்பேன் ,
உனக்கு
ஊர்தியாக........!

கருத்துகள் இல்லை: