திங்கள், 27 செப்டம்பர், 2010

ஆண்கள்.!


அந்த அழகான
இயற்கை எழில் கொஞ்சும்
அற்புதத் தீவினுள்
ஆண்டவர் ஆதாமை
உருவாக்கினார்.....

ஆதாமின் முதுகெலும்பில்
இருந்து தான் பெண்ணை
உருவாக்கினாராம்...
ஆக,
ஆண்டவருக்கே தெரிந்திருக்கிறது
ஆடவர்களின் முக்கியத்துவம் !

சற்று நோக்குங்கள் .....
நாம் ஆண்களை வெறுக்கவில்லை,
அவர்களை மறுத்துக் கொண்டிருக்கிறோம்!

அவர்களை உணரவில்லை,
உணர முடியாமல்
பிடற்றுகிறோம் ..
அவர்கள் நாகரிகம்
அற்றவர்கள் என்று.....

நம் வாழ்வில் ஆண்களின்
முக்கியத்துவம் அளவளாவியது!
"நாம் தினமும் காலை
கண் துயிலும் போதும்
நம் கண் இமைகளை
தொட்டுக் கட்டி இழுப்பது
ஓர் ஆணின் கரங்கள்-கதிரவன்"

அலைபாயும் இப்பரந்த பரவையில்
பெண்ணிற்கு உரிமை இல்லையென்று
முழக்கமிட்டு, ஆண்களின்
உரிமையை சிறுகச் சிறுகச்
சுரண்டி சுவாசிக்கும் பெண்கள் ,
அவையாளதொடங்கி ,
ஆண்களையும் ஆள வந்துவிட்டார்கள்,
"பெண்ணடிமை" என்ற பெயரில் .....

பெண்களின் பொதுவுடைமை பெருகி
தனிஉடைமையாகி ,
ஆண்வர்க்கத்தின் பொதுவுடைமை
சருகிவருவதை நாம் தினமும்
சந்திக்கிறோம்!-"ஆணாதிக்கம்"
என்ற பெயரில் ...

ஆண்களை ஆமோதிக்க வேண்டாம் ,
அவமதிக்காமல் இருப்போமே!!!

2 கருத்துகள்:

அ.செய்யதுஅலி சொன்னது…

உண்மையை மிக அழகாக பதிவு செய்து இருக்கீர்கள்

க.வனிதா சொன்னது…

செய்தாலி உங்களுக்கு மீண்டும் மீண்டும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் !