செவ்வாய், 26 அக்டோபர், 2010

கண்ணீர்!!!


இப்புவனத்தில் வாழும்
அனைத்து உயிர்களுக்கும்
கவலையின் போக்கிடம்
கண்ணீர் மட்டுமே!

அற்பத்திற்கெல்லாம் பொழிந்திடும்
இந்தக் கண்ணீரே,
கவலைகளின் அடையாளச்சின்னமாக
காலங்காலமாய் இருந்து வருகிறது!

ஆயிரமாயிரம் ஆயுதங்கள்
இருப்பினும் கடவுளால்
பெண்களுக்குக் கொடுக்கப்பட்ட
ஓர் அமைதி ஆயுதம்
கண்ணீரே!

பணம் படைத்தவன் வீட்டில்
கண்ணீரே ஒருவனுக்கு
பிணியாகிறது!

ஏழ்மை இருட்டிய வீட்டில்
நல்ல உப்புசுவையுடைய
கண்ணீரே ஒருவேளை
உணவாகிறது!

ஆம்! கண்ணீருக்கும்
வேறுபாடு கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது
நம் நாட்டில்!

முகவரியற்ற இருளில்
அர்த்தமற்ற அவலங்களுக்காகச்
சிந்திய நம் கண்ணீர்,
அநியாயமாய் தலையணையில்
விழுந்து தற்கொலை செய்துகொண்டன !

சிலரின் கண்ணீருக்கு
அஞ்சலி செலுத்தவும்
ஆளில்லை!
ஆறுதல் கூறவும் தோளில்லை!

கருத்துகள் இல்லை: