செவ்வாய், 11 ஜனவரி, 2011

நினைவுகள் .....!


என் கால்கள் இரண்டும்
கனவில் கூட கண்டிராத
ஓர் பசுமை உலகம் !
நீண்ட ஒற்றையடிப் பாதையில்
கால்கள் செல்ல மனம்
முற்படுகிறது....
கால்களோ பாதிதூரப்
பயணத்திற்குப் பிறகு
பாட்டைப் பாடுகிறது...
இன்னும் சிறிது தூரம்
சென்றதும் சுவாசிக்க
மறந்தேன் நச்சுக்கற்றை....

மணங்கமழும் மண்வாசத்
தென்றல் என் மன்றலுக்குப்
பந்தல் ஊன்ற காத்திருந்தன....
பசுமைப் பாரின் உள்ளே
கால்வைத்ததும் ,
குயில் பாணனின் வரவேற்புரை....

கெஞ்சிய கால்களுக்கு
மிஞ்சிய நேரத்தில்
ஓய்வளிதேன்....

என் எதிரே இரு
அணிற் பிள்ளைகள்
அமுதாய்த் துள்ளிக்குதித்து
விளையாடின ....

அதன் பின்னே பதுங்கிய பூனை
பதறாமல் அடுத்த அடி வைத்து,
தன் அடிவயிற்றுபசிக்காக !
ஓசையை கேட்டதும்
ஓசையின்றி மறைந்தன இரண்டும்...
கொதித்துப் போன பூனை,
குதித்துத் தாவியோடியபோது
புல்லின் மீதிருந்த பனித்துளி
என் கண்களில் தஞ்சம்புக ,

துடைத்துத் திறந்ததும் ,
கண்டிப்பான என் அம்மா
கனத்த குரலில்....

"பள்ளிக்கு நேரமாச்சி எழுந்திரு"
என்று .....!

3 கருத்துகள்:

நிலாமதி சொன்னது…

இயற்கையை வர்ணிக்கும் அழகான கனவா? எழுத்துநடை நன்றாக் இருக்கிறது. பாராட்டுக்கள.

அ.செய்யதுஅலி சொன்னது…

தோழி உங்களின் இந்தகவிதை மிகும் அருமை
தேசமயம் இக்கதை என் கனவின் நாழிகைகள் என்ற கிறுக்கலை நினைவூட்டுகிறது

http://nizammudeen-abdulkader.blogspot.com/2010/10/blog-post_05.html

க.வனிதா சொன்னது…

நன்றி தோழர்களே ! மிக்க நன்றி !