திங்கள், 31 ஜனவரி, 2011

உன் கைகளில் ....


ஈராயிரம் யுகமான
என்னிருபது நாட்கள்
கொஞ்சம் கொஞ்சமாய்
என் உயிரைக் குடித்துக்
கொண்டிருக்கின்றன.....

புகைப்படத்தில் புன்னகைத்த
உன்னை யார்க்கும் தெரியாமல்
களவாட வைத்தது
உன் புன்னகை.....
காத்துக் கொண்டே இருக்கின்றேன்
காரணமில்லாமல்....
அலுவலகத் தொலைபேசி
அழைத்தாலும் நீயாக இருப்பாயோ
என்றெடுத்து ஏமார்ந்தும் போகிறேன்....!

பேச நேரமற்று நீயிருக்க ,
பேசுவதற்கென்றே நேரம்
ஒதுக்கக் காத்திருக்கின்றேன்
காரணமில்லாமல்.....

நிச்சயத்தன்று உன்னிதழ்
சிந்திய இன்சொற்கள் தான்
இன்றென் நினைவுப் பசிக்கு
உணவளித்து வருகின்றன....

எந்நேரமும் ஏக்கத்தோடு
எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
என் கைகளை உன் கைகளில்
தாரைவார்த்துக் கொடுக்கும்
தருணத்திற்காக .......!

7 கருத்துகள்:

மாணவன் சொன்னது…

நல்லாருக்குங்க சகோ அழகான ரசனையுடன் வரிகள் சூப்பர்...

மாணவன் சொன்னது…

//பேச நேரமற்று நீயிருக்க ,பேசுவதற்கென்றே நேரம் ஒதுக்கக் காத்திருக்கின்றேன் காரணமில்லாமல்.....//

அருமை...

அரசன் சொன்னது…

வனிதா உணர்வுகளை சொல்லிய விதம் அருமை ....
சில காலம் என்றாலும் கூட அது ஒரு யுகம் போல் தெரியும் ....
உங்கள் வரிகளில் அதை புரிந்து கொண்டேன் ...
வாழ்த்துக்கள்

அரசன் சொன்னது…

பேச நேரமற்று நீயிருக்க ,
பேசுவதற்கென்றே நேரம்
ஒதுக்கக் காத்திருக்கின்றேன்
காரணமில்லாமல்....//

உண்மைதான் .. தோழி ...
எல்லாம் நல்லபடியாக முடிய எனது வாழ்த்துக்கள்

சங்கவி சொன்னது…

Nice...

க.வனிதா சொன்னது…

மிக்க நன்றி மாணவன், அரசன், மற்றும் சங்கவி அவர்களே மிக்க நன்றி வாழ்த்திய நெஞ்சங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் !

க.வனிதா சொன்னது…

மிக்க நன்றி மாணவன், அரசன், மற்றும் சங்கவி அவர்களே மிக்க நன்றி வாழ்த்திய நெஞ்சங்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன் !