புதன், 2 பிப்ரவரி, 2011

மாணவ ஒழுக்கம் !


உலக உயிர்களின்
வாழ்க்கைப் பூட்டை
ஒளியைத் திறக்க உதவும்
திறவுகோல்- ஒழுக்கம்!
ஊசியின் காதிலே
உலகத்தைத் திணிக்க
உருவாகும் முயற்சியின்
முதுகெலும்புகள் -
மாணவர்கள் !

அன்பான ஆசிரியர்களோ
தன்னலம் பாராது ,
உன்நலம் காக்க
தரணியில் அவதரித்த
பூரண பிரம்மாக்கள் !

உன்னை இந்த உலகத்தில்
அறிமுகம் செய்த உத்தமர்கள்
பெற்றோர்கள் என்றால்,
உலகத்தையே உன்னிடம்
அறிமுகம் செய்த உன்னதங்கள்
"ஆசிரியர்" என்ற பெயரோடு
உலாவருகின்றன, இவ்வுலகத்தில்!

வள்ளுவன் தன வாய்மொழியில்
ஒழுக்கம் தரும் விழுப்பத்தினை
உற்றுணர்ந்து உய்ய வழிதேடுவோம்!
பையப் பலகல்விதான் கற்று
சுற்றும் வாழ்வைப் பற்றிக்கொள்வோம் !

ஒழுக்கத்தின் முதல்படியான கீழ்ப்படியை
மனமிடுக்கோடு தொற்றிக்கொள்வோம் !
ஒழுக்கமே உயிரென உணர்ந்து,
பயிரென திறமையை விதைத்து,
பெயரென நற்பேற்றை அறுவடைசெய்வோம்!

"மாணவர்களால் மானம் பெற்றது உலகம் "
என்று மார்தட்டுவோம் !

4 கருத்துகள்:

arasan சொன்னது…

வனிதா உங்களை எந்த மொழியில் எந்த வார்த்தைகளை கொண்டு பாராட்டுவது, வாழ்த்துவது
என்று தெரியவில்லை ....
அனைத்து வரிகளும் அற்புதம் ...
கவிதை தொடுத்த விதம் அருமை...

மாணவன் சொன்னது…

மிகச் சிறப்பாக எழுதியிருக்கீங்க...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை..

பெயரில்லா சொன்னது…

good post

இராஜராஜேஸ்வரி சொன்னது…

உயிரினும் ஓம்பப்பட வேண்டிய
ஒழுக்கமே காக்கப்படவும் ,கற்பிக்கப்படவும் வேண்டியதில் முதன்மையானது .
பாடம் மறந்தால் படித்துக்கொல்ல்லாம். ஒழுக்கம் பிற்ந்தால் மாற்றுகிடையாது.
உயிர் போனால் போனதுதான்
.