வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

நாண மொழி..!


பெண்களால்
பிரதிஎடுக்கப்படும்
ஓர் பிரத்தியோக
உணர்வு-நாணம்!

பெண்களனைவரும்
பிரசவித்துக்கொண்டிருக்கும்
கற்பின் வெளிப்பாடு...

இதழ் மறுத்துக்
கண்கள் சிரிக்கும்
ஓர் மாய இன்பம்!
ஏற்றுக்கொள்கிறேன்....

ஆனால் என்னிடம் மட்டும்
ஏன் நொடிக்கொருமுறை
வீசிக்கொண்டே இருக்கிறாய் ?
உன் நாண மொழிகளை???

உன் தலைமுடி முழுதும்
சேர்த்து மழிக்காமல்
எதற்காக காதோரத்தில்
ஓரிரு முடியை மட்டும்
சுற்றி விட்டு என் நெஞ்சை
நஞ்சால் தைக்கிறாய்??

நிலா உலாவும் வான் வீதியா
உன் நெற்றி ?
ஒரே சுருக்கத்தில் எனை
மடித்து மடக்கிவிட்டாயே ?

உன் கண்கள் இரண்டும்
மீன்களா என்ன ?
என் இதயத்தைப்
புழுவாக்கித் தூண்டிலில்
கட்டி நீரினுள் விட்டதும்
சட்டென்று இழுத்துவிட்டது ?

உன் கண்களில் வழியும்
கண்ணீரா நான்?
பன்னீர் போல் உன்
கன்னக்குழியில் தேக்கிவைத்து
நீந்துகிறாயே?

அப்படி என்ன பாவம் செய்தேன் ?
நான் சுவாசிக்க வேண்டிய
காற்றை உன் நாசி
திருடிச் செல்கிறது?

உன் காதணிக்கு என்
இதழோடு என்ன வேலை ?
எப்போது பார்த்தாலும்
என் இதழ் உச்சரிப்பிலேயே
ஊஞ்சல் ஆடுகிறது ?

உன் இதழ்கள் இரண்டும்
மதுபானம் அருந்திவிட்டதா?
சற்று நேரத்தில் என்னை
உன்னில் வீழ்த்திவிட்டதே ?

உன் முகம் ரோஜா மலரோ ?
முகப்பருக்கள் அனைத்தையும்
பனித்துளி என்றிண்ணி
சேர்த்து வைத்திருக்கிறது ?

காற்றில் கதைபேசும்
உன் கைகள் இரண்டும்
இப்போது என்னை
விலைபேசுகின்றன,
உன் இதயத்திற்காக ....

இத்தனையாண்டுகளாய்
நான் என் நிழலோடுதான்
பயணித்தேன் !
நேற்று முன்தினம்
திரும்பிப் பார்க்கிறேன் ,
என் நிழலுக்குப் பதில்
நிஜமாக நீ !
தெரியாமல் தான் கேட்கிறேன்
ஏன் என்னை இம்சிக்கிறாய் ?

என் நிழலாய் வரும்
உன் அன்பிற்குப் பெயர்
காதல் என்பதா?
கடவுள் என்பதா?
புரியவில்லையடி....!

3 கருத்துகள்:

jacky170679 சொன்னது…

unakku theriyathu unn nizal naan enbadhu aanal enakku theriyum unn uyir naan enbadhu

ச .பிரசன்னா சொன்னது…

கவிதைகள் , எனக்கும் உயிர் ; பழக்கம்.
ஆனால்
பழகும் யாவும் , பரிமாறும் யாவும் கசக்கும் . கசங்கும் .

கவிதாயினி வனிதா ,
உங்களுக்கு அனுபவம் குறைவாய் இருக்கலாம் ;
அல்லது ,
காதலின் வேதனை தெரியாதிருக்கலாம்,
ஆனால்,.
காதலின் ஆரம்பம் என புரிகிறது .

நாணம் , பெண்ணின் அழகு ; ஆரம்ப நளினம் .
அவை உங்களது
நாணக் கவிதையில் இருக்கிறது .
தெரிகிறது .

வலியில்லதவரை தொடர் ;

என் மொழி புரிந்தால் ,
மறு மொழி இடுங்கள் .

பகிர்வோம் ; பரவுவோம் .

ச.பிரசன்னா

KATHAL சொன்னது…

anaithume miga arumai kavithaini vanitha..........mudinthaal enathu blogger visit pannunga.....


www.gunakirukkalkal.blogspot.com