வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஊனம்...


சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளால்

மாற்றுத்திறனாளிகள் என்று

பெயர் மாற்றம் செய்யப்பட்டு

வரும் ஒரு சிசிக்குழந்தை

ஊனம்...!


எங்களின் தாய்தந்தை செய்த

தவற்றினால் நாங்கள்

கருப்பை தவறிவிட்டோம் ...


எக்காலத்தில் செய்த ஊழோ

தெரியவில்லை...

இன்று,

எம் ஊழுடம்பைச் சுற்றி

வாதை கூடாரமிட்டுள்ளது...!


அனாதைகள் அனைவரும்

கடவுளின் குழந்தைகளாம்....

நாங்கள் அனாதைகளல்ல ..

பெற்றோரிருந்தும் பிரயோசனப்படாத

பிரகஸ்பதிகள்...!


உடல் உறுப்புகள் மட்டுமே

உதிர்ந்துள்ளது எங்களிடம்...

மனவுறுதியை மட்டும்

குன்றம் போல் குவித்திருக்கிறோம்...!


எங்களின் கண்கள்

மனிதனை மனிதனாகத்தான்

பிரதிபலிக்கும் ...

ஆனால் ,

உடலுறுப்புகள் அனைத்தும்

ஒருங்கமைக்கப்பட்ட

மானசீக மனிதங்களின்

பார்வையில் நாங்கள்


"மனிதப் பிறவியெடுத்து

நெளியும் மண்புழு வகையினர்"


எங்களைப் பரிதாபப் படுத்தி

பாத்திரத்தைக் கொடுத்துவிடாதீர்....

பழகிவிடும் என் சாதியினருக்கு,

உழைக்கும் வர்க்கத்திடமிருந்து

பிழைக்கக் கற்றுக்கொள்ளும் வித்தை...!


ஊனம் என் உடம்பில் மட்டுமே..!

உழைப்பிற்கு இல்லை,

எத்தனை முறை விழுந்தாலும்

எழுந்துகொண்டே இருப்போம் ,

எங்கள் மனவுறுதியை

ஊன்றுகோலாக்கி....!

12 கருத்துகள்:

விமலன் சொன்னது…

ஊனமுற்றோருக்கு மனஉறுதியே ஊன்று கோலாய் இருப்பதை உங்களது படைப்பு நிரூபிக்கிறது.வழ்த்துக்களும் நன்றியுமாய்/

நிரூபன் சொன்னது…

சமுதாயச் சீர்த்திருத்தவாதிகளால்

மாற்றுத்திறனாளிகள் என்று

பெயர் மாற்றம் செய்யப்பட்டு

வரும் ஒரு சிசிக்குழந்தை

ஊனம்...!//

கவிதையின் முதல் வரிகளே, மனதை ஒரு கணம் முள்ளால் குத்துவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

நிரூபன் சொன்னது…

எங்களின் தாய்தந்தை செய்த

தவற்றினால் நாங்கள்

கருப்பை தவறிவிட்டோம் ..//

இது ஊனமுற்றோர் பற்றிய தவறான புரிதல்களை உடைய சமூகத்திற்கு கொடுக்கும் சாட்டையடி.

நிரூபன் சொன்னது…

நாங்கள் அனாதைகளல்ல ..

பெற்றோரிருந்தும் பிரயோசனப்படாத

பிரகஸ்பதிகள்...!//

இவை யதார்த்தம் நிறைந்த உயிர்ப்புள்ள வரிகள். ஊனமுற்றோரின் உண்மைக் குரல்கள்.

நிரூபன் சொன்னது…

மனவுறுதியை மட்டும்

குன்றம் போல் குவித்திருக்கிறோம்...//

தன்னம்பிக்கையினைத் தளர விடாதோரின் மனவுறுதியின் வெளிப்ப்பாட்டை உரைத்து நிற்கிறது இவ் வரிகள்.

நிரூபன் சொன்னது…

எத்தனை முறை விழுந்தாலும்

எழுந்துகொண்டே இருப்போம் ,

எங்கள் மனவுறுதியை

ஊன்றுகோலாக்கி....//

சமுதாயத்தில் மீண்டும் வாழத் துடிக்கும், நம்பிக்கையை மனவுறுதியாக்கிப் போராடிய படி வாழ்வை நடத்தும் ஊனமுற்றோரின் வெளிப்பாடாய் கவிதை அமைந்துள்ளது.
கவிதை மனதில் வலியை வரவைத்து, கண்களில் இரக்கத்தை உண்டாக்கும் யதார்த்தம்.

முல்லை அமுதன் சொன்னது…

http://kaatruveli-ithazh.blogspot.com/vaazhthukal.

வ.வனிதா . சொன்னது…

மிக்க நன்றி நண்பர்களே நிரூபன் அவர்களுக்கு தனி நன்றிகள் வரிகளை வலிந்து படித்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி அனைவருக்கும் கடமைப்பட்ட சிறியவள் யான் ! மிக்க நன்றி !

தமிழ்தோட்டம் சொன்னது…

அருமையான வரிகள் வாழ்த்த வார்த்தைகள் வரல

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

கவிதை அருமை !!

-"நந்தலாலா இணைய இதழ்"

சத்ரியன் சொன்னது…

//எங்களைப் பரிதாபப் படுத்தி
பாத்திரத்தைக் கொடுத்துவிடாதீர்....
பழகிவிடும் என் சாதியினருக்கு,

உழைக்கும் வர்க்கத்திடமிருந்து
பிழைக்கக் கற்றுக்கொள்ளும் வித்தை...!//

சகோதரி வனிதா,

நெஞ்சுரம் ஊட்டும் வரிகள். சிறந்த கவிதை.

வ.வனிதா . சொன்னது…

nandri chathriyan thozhare !