சனி, 10 டிசம்பர், 2011

பள்ளிக்கூடம்....!

சிறகுகள் அனைத்தும் 
சிறகடித்துச் சென்று 
ஒட்டி உறவாடி 
உயரப்பறக்கும் ஓர் பெரும்பறவை....
பள்ளிக்கூடம்....!

மனிதனாய் பிறந்த 
குழந்தைகளின் தெவிட்டாத 
தேனின்பம்....

கல்வியைக் காதலித்து 
மணமுடித்துவரும் மணமக்களின் 
தகப்பன் வீடென்றும் கூறலாம்....!

பெற்றோரின் கனவுகளைக் 
கையிலேந்தி ,
இனிப்புப் பனுவல்களை 
முதுகில் சுமந்துச் 
சரமாகச் சீருடையுடன் 
செல்லும் ஏறும்புக்கூட்டங்களின் 
எழிலகம்...!

இந்தக் கோவிலினுள்
பக்தப் பிரஜைகளுக்காகத் 
தன் உயிரையே அர்ப்பணிக்கும் 
ஆயிரம் தெய்வங்கள்,
ஆசிரியர்கள்...!

இதிலும் .,
உயிரைக்குடிக்கும் 
அரக்கியர்களும் உலாவத்தான் 
செய்கிறார்கள்.....
என்ன செய்வது?
விதியின் மீது பழியைப் போட்டு 
பழக்கமாயிற்றே...!

தவமிருந்தாலும் திரும்பிபார்க்காத 
நம்  பிள்ளைப்பருவத்தை,
நரை , திரை, மூப்பு, இவை வந்துற்றபோதும் 
நாம் திரும்பிப்பார்க்கலாம்.... நம் பள்ளிகளின் மூலம்...!

மனிதக் குழந்தைகளே....
படிப்பு முடிந்தாலும் கூட 
அடிக்கடி பறந்து செல்லுங்கள் 
நீங்கள், படித்து, அடித்து, பறந்து, திரிந்து,
சிரித்து , அழுது, மகிழ்ந்த 
நும் பள்ளிகளுக்கு...!

பள்ளிக்கூடம் 
நம் வரலாற்றின் சகாப்தம்...
வாழ்வின் அளப்பரியதோர் 
அத்யாயம்....!

5 கருத்துகள்:

அரசன் சொன்னது…

வணக்கம் திருமதி. வனிதா ...
நீண்ட நாட்கள் கழித்து
ஒரு செழிப்பான உயிர்ப்பான கவிதை ..
அடிக்கடி செல்லாவிட்டாலும் ஆண்டுக்கு ஒருமுறையேனும் சென்று வருகிறேன் ..என் பள்ளிக்கு .
வாழ்த்துக்கள் ...

"நந்தலாலா இணைய இதழ்" சொன்னது…

மீண்டும் பழைய நினைவுகளை மீட்டும்.... பள்ளிக்கூடம்!!

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

நன்றி நண்பர்களே ! அரசன் அவர்களே வெகுநாட்களுக்கு பின் உங்களிடம் கவிதையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ! அடிக்கடி கவிதை எழுத முடியவில்லைஎனினும் அவ்வப்போது எழுதுகிறேன் ! இன்னும் நினைவு வைத்துக்கொண்டு என் கவிதையை வாசித்தமைக்கு நன்றிகள்....!

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

நன்றி நண்பர்களே ! அரசன் அவர்களே வெகுநாட்களுக்கு பின் உங்களிடம் கவிதையை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் ! அடிக்கடி கவிதை எழுத முடியவில்லைஎனினும் அவ்வப்போது எழுதுகிறேன் ! இன்னும் நினைவு வைத்துக்கொண்டு என் கவிதையை வாசித்தமைக்கு நன்றிகள்....!

ivingobi சொன்னது…

உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்....

முகம் காணாமலே பாசத்தோடு

எனக்கு இந்த உலகத்தில் வாழ்த்து சொல்லிய

முதல் உள்ளம் நீங்கள் அல்லவா.....

எப்படி சொல்வேன் என் நன்றிகளை.....

உங்களின் வாழ்த்துக்களை எதிர் நோக்கும்
V.T .PRANAV ....
http://pranavpages.blogspot.in/