
இணையதளவழியே இறைவனால் அருளப்பட்ட என் உடன்பிறவா அண்ணன் வெங்கடேஷ் மற்றும் அண்ணி டெரின்லைஷா தம்பதியினருக்கு சனவரி இரண்டாம் நாள் இந்த வருடம் பிறந்த முத்திற்கு என் மடலை சமர்ப்பிக்கிறேன் !
மலராத அரும்பே
உனக்கொரு மடல்....
மட்டற்ற மகிழ்ச்சியில்
மனமுவக்கும் உன் தாய்க்கு ,
ஈன்ற பொழுதின் பட்டத்
துன்பங்களனைத்தும்
இல்லாமற்போனது உன்
இமயம் வியக்கும்
முகத்தைப் பார்த்ததும்......
காலைக் கதிரவன் மறைந்துவிடும் ,
கண்களைத் திறக்காதே...
நிலவு மேகத்தினுள் நாணும்,
இதழ்களைக் குவிக்காதே....
விண்மீன்கள் பற்களாய்
மின்னிட ஏங்கிடும் ,
வாய்திறவாதே.....
இயற்கையை ஏங்கவைத்த
இன்ப ஆழியே ...
உனக்குள் மூழ்கித்தான்
உன் பெற்றோர் துன்பம்
துறப்பார்கள் ....
இரு சிப்பிகளின்
காதலுக்குப் பிறந்த
வெள்ளிமுத்தே!
மணிக்கொருமடல் எழுதத்
தூண்டும் உன் பொன்முகம்
பொதிந்து போயிற்று
என் மனதில்....!
வினையெல்லாம் அறுத்து
பயனைப் பெற வேண்டிடு
இறைவனை....!
7 கருத்துகள்:
மிக்க நன்றிகளடா என் தங்கமே......
உன் அண்ணியார் பார்தால் மிகவும் மகிழ்வார்கள்........
நெஞ்சம் முழுதும் அன்போடும் நன்றிகளோடும் உன் அன்பு அண்ணா மற்றும் அண்ணியார்.......
என் தங்கமே உன் வாழ்வும் என்றும் சிறக்கட்டும் என்று மனதார வாழ்த்தி மகிழும் உன் அன்பு அண்ணா.......
nandir naa
பின்னிட்ட டா தங்கம்.....
அருமை வாழ்த்துக்கள்.......
//இரு சிப்பிகளின்
காதலுக்குப் பிறந்த
வெள்ளிமுத்தே!
மணிக்கொருமடல் எழுதத்
தூண்டும் உன் பொன்முகம்
பொதிந்து போயிற்று
என் மனதில்....!//
parattugal
வாழ்த்துக்கள்
நன்றி தோழர்களே ! மிக்க நன்றி !
கருத்துரையிடுக