புதன், 23 பிப்ரவரி, 2011

பயணம் புதிது!


காதல்,
புரிதலில் மட்டுமே
இன்பம் காணும்
குழந்தை!

இருட்டுப் பாதையில்
பழகாத பாதங்கொண்டு
பயணிக்கும் இரு
விண்மீன்களின்
ஒளிவிளக்கு!

மன்றல் புரியா
இரு தென்றல்கள்,
மழை நனைக்க
குடை நனைய
குளிர்காய்ந்து வந்த
நெஞ்சங்கள் மட்டும்
நெடுந்தூரப் பயணமாய்....

இருளைப் பிளந்து
பாதை போடும்
நம் விழிகளுக்கு
வெளிச்சம் நல்கிய
நியான் விளக்குகளிடமும்
சினேகம் உயிர்க்கிறது!

அன்பு மீதூரப் பெற்று
அரவணைத்துக் கொண்ட
என்னுடல் இங்கே...
சொல்லிவிடு,
உனைக்கேட்காது
எங்கும் செல்லாத
என் உணர்வு எங்கே என்று...!

ஊரே அஸ்தமனமான
அரைப்பொழுதில் ,
எனக்கு மட்டும்
உதயமான உன்கனவு
என் இமைகளின் இடுக்குகளில்...

காத தூரம் சென்றாலும்
கால்வலிக்காத பயணம்
உன் தோளோடு சாய்ந்து
செல்கையில்....

சற்றே பொறுத்துக்கொள் !
வாழ்வு முழுவதும்
அடிமைச்சாசனம்
எழுதித்தருகிறேன்!

உன் அன்புச் சாலையில்
என்றும் பயணிக்க....!

5 கருத்துகள்:

arasan சொன்னது…

மீண்டும் ஒரு சிறப்பான கவி வரிகள் ...

arasan சொன்னது…

மன்றல் புரியா
இரு தென்றல்கள்,
மழை நனைக்க
குடை நனைய
குளிர்காய்ந்து வந்த
நெஞ்சங்கள் மட்டும்
நெடுந்தூரப் பயணமாய்...//

சொல்லவே வேண்டாம் ,.
நச் . வாழ்த்துக்கள் வனிதா ....

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை நல்லாருக்கு. பிளாக்கோட லே அவுட்டும் பின்னணி கலரும் ஓக்கே

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

மிக்க நன்றி ! தோழர்களே!

Learn சொன்னது…

மிக சிறப்பான முத்தான வரிகள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in