
ஆசான்களின்
அறிவுமுன்னோடியாகி
உலகத்தின் அழகை
எதிரொலிக்கும்
கண்ணாடி-இருள்..!
நிதம் போர்நிகழும்
அந்தப் புட்கரத்தில்
பகலெல்லாம்
ஆதவரசனின் ஆட்சி....!
நேரம் நகர்கையில்
நிர்வாண மேகம்
நாணமுற்று இழுத்துப்
போர்த்தும் பட்டுக்
கம்பளம்-இருள்...!
பட்டுக்கம்பளத்தினைக் கிழித்து
பூமிக் கண்ணாடியில்
முகம் பார்க்கவரும் முழு
இரவுத் தேவதை- நிலா...!
இருட்பாதையில் இங்குமங்கும்
எரிந்து நின்று ஒளிவீசும்
நியான் விளக்குகள்
நட்சத்திரங்கள்...!
இவையனைத்திற்கும்
இடமளித்து இதயத்தைப்
பரிமளித்துக் கொண்டிருக்கும்
வானம்...!
இவற்றிற்கிடையே
இருளில் தொலைந்த
என் தூக்கம்...!
இயற்கையே ...
என் வாழ்வு ஒளிர விழைகிறேன்!
சற்றே ,
உன் இருளைக் கடன் கொடு...
சிந்தித்துவிட்டுத் தருகிறேன்...!!
2 கருத்துகள்:
கடைசியில் முடித்த விதம் அருமையோ அருமை ...
மிக ரசித்தேன் தோழி ...
ரொம்ப அருமையான வரிகள் தோழி
தமிழ்த்தோட்டம்
கருத்துரையிடுக