புதன், 30 மார்ச், 2011

உன் பிறந்த நாள்...!


சுழல்கின்ற பூமியினுள்

சுழலாத சூறாவளியாய்

உன் அன்பு,

சுழற்றி அடிக்கிறது என்னை...!


உன் கண்களின் ஒருநிமிட

சந்திப்பில் என் ஒட்டுமொத்த

உணர்சிக் குருவிகளெல்லாம்

சிறகு முளைத்துப்

பறக்கத் துவங்குகின்றன....!


என் உணர்வுகள்

ஒருங்கிணைந்து

உருவான,

குழந்தை நீ ...!


இன்று,

நீ மகிழ்ந்தால்

உன் பற்களாய் பிறவியுற்று

பிரகாசமாய்ப் புன்னகைப்பேன்...!


துன்பத்தில் உழன்றால் ,

உன் கண்ணீராய்க்

கரைபுரண்டோடி

கவலைகளைக் கரைத்திடுவேன்...!


உன் பிறந்தநாள்

பந்தங்களிடையே

பழகிப்போனாலும்,


ஏனோ

இன்று எனக்கு மட்டும்

புதிதாய்ப் பிறந்த நீ...!

6 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

சுழல்கின்ற பூமியினுள்

சுழலாத சூறாவளியாய்

உன் அன்பு,

சுழற்றி அடிக்கிறது என்னை...!//

பிறந்த நாள் நினைவில் இவ்வளவு வலிகளா?

நிரூபன் சொன்னது…

உன் கண்களின் ஒருநிமிட

சந்திப்பில் என் ஒட்டுமொத்த

உணர்சிக் குருவிகளெல்லாம்

சிறகு முளைத்துப்

பறக்கத் துவங்குகின்றன....!//

கண்களின் மகத்துவத்தை கவிதை உணர்ச்சியின் வெளிப்பாடாய் உணர்த்தி நிற்கிறது.

நிரூபன் சொன்னது…

என் உணர்வுகள்

ஒருங்கிணைந்து

உருவான,

குழந்தை நீ ...!//

இந்த உவமைகள் கவிதைக்கு இன்னும் அணி சேர்க்கின்றன.

நிரூபன் சொன்னது…

உன் பிறந்தநாள்

பந்தங்களிடையே

பழகிப்போனாலும்,


ஏனோ

இன்று எனக்கு மட்டும்

புதிதாய்ப் பிறந்த நீ...!//

உன் பிறந்த நாள் எனது பார்வையில் இரு பொருள்களைச் சொல்லி நிற்கிறது. தாய் குழந்தையினைப் பார்த்தும் கவியாகவும், காதலி காதலனை நோக்கிப் பாடும் கவியாகவும் இருக்கிறது.

உன் பிறந்த நாள் நினைவுகளை மீட்டும் ஒரு நிகழ்வின் பிரதிபலிப்பு.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ரைட்டு.. பிறந்த நாள் வாழ்த்து

poetvanitha சொன்னது…

அன்புள்ள நண்பர் நிரூபன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி ! ஆனாலும் உங்களுக்கு அதிகமான அறிவென்று ஏற்றுக்கொள்கிறேன் ! எல்லா கவிதையிலும் இருபொருள் தன்மை மிக அழகாக கண்டுபிடிக்கின்றீர் ! மிக்க நன்றி ! நான் என் கணவரின் பிறந்த நாளுக்காக நான் எழுதிய கவிதைதான் ! காதலுக்கும் கூட என்றும் வைத்துக்கொள்ளலாம் ! வலைப்பூ வந்த நண்பர்களுக்கு நன்றிகள் !