வெள்ளி, 18 ஜூன், 2010

அநியாயம்.....


இரண்டாம் வகுப்பைகூட
இடந்தவிரவிட்ட அப்பாவிற்கு
ஜாக்கிசான் தமிழில் பேசவேண்டும்
ஜார்ஜ் புஷ் தமிழில் பேச வேண்டும்
சல்மான்கானும் தமிழில்
பேச வேண்டும்....
நேற்று முன் தினம்
பள்ளியில் சேர்த்துவிட்டு
வந்த தன் கடைக்குட்டி மட்டும்
வெளுத்து வாங்க வேண்டுமாம்
ஆங்கிலத்தில்....

கருத்துகள் இல்லை: