சனி, 21 ஆகஸ்ட், 2010

என் ஒருநாள் பயணம்...


மக்களின் தேவைக்கேற்ற
சேவையாளன் ,
காலந்தவறாமல்
நேரந்தவறிவரும்
ஏழைகளின் ஹெலிகாப்ட்டர்-
பேருந்து.!

உனக்காக காத்திருக்கும்
தருணங்களில் எம்
மக்களின் கால்கள்
கதறினாலும்,
கண்கள் சிதறாது
உன்னை எதிர்பார்த்திருக்கும்......

வாயிலில் நுழைந்ததுமே
பல்லவி பாடும் நடத்துனர்
"பயணசீட்டு வாங்குங்கள்"
என்று கூறியே குறுகி
விடுவார் போலிருந்தது......

உன்னுடைய குறைபாட்டால்
தினந்தோறும் மக்கள்
வாயில் சிக்கித் தவிக்கும்
நிரந்தர சிம்மாசன
மன்னர்கள் ,
ஓட்டுனரும், நடத்துனரும்.....

ஏராளமான இளவட்டங்கள்
எக்காளமிட்டு பார்வையாலே
பரிகாச அம்புகளை
வீசிக்கொண்டிருக்கும்....

உள்ளே கடலளவு
இடமிருந்தும்,
நீச்சல் தெரியா
திமிங்கலங்கள்
படிக்கட்டில் நின்றே
பயணிக்கும்....

அலுவலகம் செல்லும்
அதிபதிகள் ஆயுளின்
பாதி உன்னுள்ளே
கரைந்து விடுகிறது.....

ஒரே நாளில் ,
அறுபது நட்பு,
ஆறு காதல்,
இரு பகை என்று
சம்பாதித்து தரும்
பொதுநல ஊழியன்...

தினமும் என் பயணத்தில்
இடம்பெறும் சுயநலமில்லா
கதாநாயகன்
பேருந்து......

கருத்துகள் இல்லை: