செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஐம்பது ஆண்டுகள் கழித்து....இன்னும்
ஐம்பது ஆண்டுகள் கழித்து
பிறந்து பார்த்தேன்.....
ஐந்தாறு உலகப்போர்கள்
நடந்து முடிந்திருந்தன.....

காஷ்மீரத்தை கேட்ட
பாகிஸ்தான் இன்று ,
கன்னியாகுமரியோடு
இமயத்தையும் சேர்த்து
கேட்கின்றது...

என் அன்னை தேசம் ,
அமெரிக்காவை
தந்தை என்று
அறிமுகம் செய்து
வைத்தது

பக்கத்து ஊருக்குப்
பயணிக்க இலவச
விமானங்கள் பறந்து
கொண்டிருந்தன......

ஐ.டி. கம்பெனிகள்
அழிந்துபோய் ,
அவனியெங்கும்
விவசாயம் செய்யப்பட்டு
விலையும் நிர்ணயிக்கப்பட்டது ,
விவசாயிகளால்.....

இரண்டாண்டுகள் மட்டுமே
ஆயுள் கொண்ட
முதலமைச்சர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர் ,
ஒவ்வொரு மாவட்டத்திற்கும்......

சாதிமதம் என்ற சொல்லே
தமிழ் அகராதியில்
இருந்து காணாமற் போயிற்று ...

வாக்காளர் அட்டையில்
பெயருக்கு மாற்றாக
இந்தியன் என்று
பொறிக்கபட்டிருந்தது.....

1 கருத்து:

ivingobi சொன்னது…

NIjathil nadanthaal rombavum inikkum....
ippadi oru ulagathil thaan ini pirakka vaendum......