புதன், 10 நவம்பர், 2010

கனவு ...கனவு,
கண்களுக்கு நிதம்
அளிக்கப்படும் ஒரு
உணவு....
மூளை மேடையில் கண்கள்
நிகழ்த்தும் ஓர் கற்பனைக்
காவியம்....
விடிந்ததும் முடிந்துவிடும்
ஒரு சரித்திர சகாப்தம்.....
கால்கள் வலிக்காமல் பயணம்,
ஒரு நொடியில் மரணம்,
சில நொடியில் வாழ்க்கை,
திரும்பிடும் பந்தம் ,
திரும்பாத சொந்தம்,
எதிர்பாராத ஏக்கம் ,
உணர்ச்சிகளுள் சிக்கித்தவிக்கும்
உண்மையிலா ஒருமாய
வாழ்வு....
சொந்த கற்பனைகள்
கலவாத காரிருள் நண்பன்!
கண்கள் திறந்ததும்
கவலையில் கண்ணீர் சிந்தும்
கற்பனைகள் மெச்சிய
வாழ்வு ! கனவு !

1 கருத்து:

அரசன் சொன்னது…

கண்கள் திறந்ததும்
கவலையில் கண்ணீர் சிந்தும்
கற்பனைகள் மெச்சிய
வாழ்வு ! கனவு !

nice lines..
keep it up ur rocking work...