சனி, 26 பிப்ரவரி, 2011

விடியலைத் தேடி.....


என் சமகாலச் சமுதாயம்
மெல்ல மெல்ல மறந்துவரும்
ஓர் மகத்தான இனம்
நம் தமிழினம்...!

இனிவருங்காலங்களில்
எல்லாம் "தமிழன்"என்றசொல்
வெறும் ஏட்டளவில் நின்றுவிடுமோ
என்ற கலக்கத்தினாலே இன்று
என் ஊமை மௌனத்தை
உடைத்துக்கொண்டு உங்களுடன்
பேசுகிறேன்!

ஆயிரம் கோடி தலைவர்கள்
அரும்பாடுபட்டு பெற்றுத்தந்த
சுதந்திரத்தீயை நாம்
கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் ஊற்றி அணைத்துவருகிறோம்!

கடலில் கூட கரைகளிட்டுகொண்டு
சிங்கள இராணுவத்தினர்
சுட்டுக் குவிக்கின்றனர்
நம் தமிழர்களை....

நேற்றுப் போன கணவன்
வருவானா?
இன்று போன இளவல்
வருவானா ? என்று
எதிர்ப்பார்த்தே பெண்களின்
கண்களில் பசலைப் பூத்துவிட்டது !

அவரவர் மொழிகளை அவரவர்
பாதுகாக்கின்றனர் !
இந்தி மொழியரிடம் கடிதம்
எழுதக்கேட்டால் இந்தியில்தான்
எழுதுகிறான்...

நம் தமிழன் மட்டும்தான்
தமிழில் எழுத அவமானப்பட்டு
ஆங்கிலத்திடம் அனுமதிகேட்கிறான் !

இன்று எதிர்பார்த்த உலகம்
வரவில்லையென சோர்வடையும் நீ ,
உலகத்தின் எதிர்பார்ப்புகளுக்கெல்லாம்
ஊமையாகி ஓடுவது ஏன்?

மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மறவன்
மகா உன்னத வரலாற்றில்
வளம்பெற்றான்...!

இங்கு ,
வரலாறானது
இறந்தகாலத்தையே
எடுத்தியம்புகிறது....!

தமிழனே!
இனிவரும் எதிர்காலத்தையாவது
நமதுரிமையாக்குவோம்!
மூழ்கிய கப்பலில் முயன்றளவு
நீந்திப் பழகுவோம் !
தினம் உதிக்கும் சூரியனோடு
சிநேகம் செய்வோம் !
அவனோடு சேர்ந்து நாமும்
உதித்து ,
புதியதோர் விடியலைத் தேடித்
பயணம் செய்குவோம் !

3 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

முத வெட்டு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>>நம் தமிழன் மட்டும்தான்
தமிழில் எழுத அவமானப்பட்டு
ஆங்கிலத்திடம் அனுமதிகேட்கிறான் !

தமிழனின் தலை எழுத்து

சாகம்பரி சொன்னது…

தற்சமயம் MNC ஆதிக்கம். நாம் பேச வேண்டியதும் அதில்தான். ஆங்கிலத்தில் பேசினால்தான் நம்முடைய தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தப்பு தப்பாக பேசினாலும் மரியாதை கிட்டுகிறதே. ஆங்கிலம் தெரியாதவர்கள் எண்ணிக்கை அதிகம் இருக்கும்வரை அதன் மரியாதை குறையாது.