புதன், 9 மார்ச், 2011

கவிஞன்.


இவன்,
படைத்தல் தொழில்புரியும்
பிரம்மனின் குளோனிங்
செய்யப்பட்ட ஒரு
குழந்தை...!

பூமிப் பந்திற்கு வெளியே
நின்று சிந்திக்கும்
திறனுடைய ஓர்
செயற்கைக்கோள் ...!

இவன் பேனா,
பிரதியெடுக்கப்பட்ட
திருவள்ளுவரின் அச்சாணி...!
இயற்கைக் கைம்பெண்ணிற்கு
வாழ்வு கொடுக்க ,
கற்பனைத் தாலிகட்டி
மறுமணம் செய்பவன்....!

பனுவலில் விதையிட்டு
பூக்களுக்கு வாசம்கொடுத்து
வண்ணத்துப் பூச்சிகளின்
வாய்திறந்து தேனூட்டுவான்...!

காற்றின் கைகளில்
ஏணியிட்டு ஏறி
மணமலர்களுக்கும்
வண்ணம் தீட்டுவான்....!

அச்சமும் நாணமும்
நசிந்து உண்மையை
உணர்ந்தவாறு புணரவைப்பான்...!

அரசியல் துன்பமோ ,
உரசியல் இன்பமோ ,
விதிவிலக்கில்லாமல்
அவனிமேடையில் அரங்கேற்றிடுவான்...!

தனித்ததோர் திறமை வாய்ப்பினும்
மக்களின் வாய்தனில்
பித்தன் எனப்பெயர்பெற்று
வலம்வருவான்....!

இவன்,
கவிஎழுத வயப்படும் போதெல்லாம்
மனைவி ஆயத்தமாகிவிடுவாள்
அணிகலன்களைக் கழற்றித் தர....!

இவன்,
குழந்தை தமிழ் படிக்க
மனைவியின் தாலிக்கொடி
முதற்கொண்டு இந்தி படிக்க வேண்டும்....!

இவன்,
குப்பையைக் கிளரும்
சேவல்களின் மத்தியில்
மின்னும் வைரம்...

உரியவரின் கண்களில்
பட்டால்தான் பறிமுதல்
செய்யப்பட்டு பிரகாசிக்கக்கூடும் ...!

4 கருத்துகள்:

செய்தாலி சொன்னது…

கவிஞனை பற்றிய அருமையான படைப்பு தோழி
வார்த்தை பிரயோகம் அருமை நல்ல வர்ணை
இறுதியில் கடந்தகால கவிஞர்களின் வாழ்கையை அழகாய் படம் பிடித்து காட்டி இருக்கீங்க பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

திருமதி.வனிதா வடிவேலன். சொன்னது…

மிக்க நன்றி தோழரே ! நம் வாழ்க்கையும் இப்படிதானே உள்ளது ?

Learn சொன்னது…

கவிஞன் வரிகள் அருமை.. கவிஞரின் வாழ்க்கை பற்றிய வரிகள் அருமை பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Pranavam Ravikumar சொன்னது…

வரிகள் அருமை