வியாழன், 17 ஜூன், 2010

மகன் மாண்பு !!


அன்பான குடும்பம்
அழகான குழந்தைகள்
வாழ்க்கைப் பயணம்
வெற்றிப் பாதையில்
வெகுவாக ஓடிக்கொண்டிருந்தது !!
பாலர்களை பாடசாலையில்
விட்டு விட்டு வரும் வழியில்
சாலை விளக்கு உதட்டுக்குச்
சிவப்புச் சாயம் பூசி நின்றது !!
வாகனம் நின்றது !!
பிச்சைக்காரி பிச்சை எடுத்தாள் ..
மனம் நொந்து போனான்,
பாலூட்டிய அன்னையை
வறுமையில் பார்த்ததும் !!!
தன்னிடம் வந்து யாசிக்கும்
தருணத்தில் முகம்
திரும்பியது !!
வெட்கப்பட்டல்ல !!!!
அடையாளம் கண்டு
பினதொற்றி வந்து
விடுவார்களோ என்ற
எண்ணத்தில் !!!!

கருத்துகள் இல்லை: