வெள்ளி, 18 ஜூன், 2010

இது சத்தியம்......


வாலிபனே வா!
உன் சக்தி அளப்பரிது !
நீ தூங்குவதற்கு
பிறக்க வில்லை ..
இவ்வுலகத்தையே தூக்கி
நிறுத்தப் பிறந்தவன்....

வரலாற்றில்
உனக்கு முன் உன்
போன்று பிறந்தவர்கள்
இவ்வுலகத்தையே
தூக்கி நிறுத்தி இருக்கிறார்கள் !!

இயலாது என்று
இவ்வுலகத்தில் என்
அகராதியில் இல்லை
என்று பொன்மொழி
புகன்றவன் அவர்களில்
ஒருவனே .....

ஆம் ! இவ்வுலகத்தில்
இயலாது என்பது
எதுவுமே இல்லை

இது சத்தியம்.......!!!

கருத்துகள் இல்லை: