வெள்ளி, 18 ஜூன், 2010

செவியின் கதவு.....மனசு


தனது இனத்தை
பசியாற அழைக்கும்
காக்கைகளின்
பாசக்குரல்கள்......

பிசிறில்லாத குரலில்
பேசி மகிழும்
கிளிகளின்
உரையாடல்கள்......

ஒரே பல்லவியை
ஓயாமல் பாடும்
குயிலின்
ஜீவகானங்கள்........

கிடைத்த உணவை
கொத்தி தின்கையில்
கோழிக் குஞ்சுகளின்
மகிழ்ச்சி மன்றங்கள்.......

உச்சிக் கிளைதனில்
அணில்களின் உற்சாக கவனம்
பழத்தின் மீது பாய்ந்ததால்
சிறகடிக்கும்
பட்டாம்பூச்சியின் சரசரப்பு.........

இதற்கிடையில் எதையோ
எடுத்துத் தர உரக்கக் கத்திய
அம்மாவிடம் கேட்க வேண்டும்
என்ன கேட்டாய் என்று !!!!!!

கருத்துகள் இல்லை: