செவ்வாய், 22 ஜூன், 2010

வசூல்...


என் அன்னை
உயிர்விடும் தருவாயில்
மருத்துவமனையில்...

தெரிந்தவர்களிடமெல்லாம்
கடன் கேட்டேன்,
கொடுக்க மறுத்தனர்...

வறுமைக்குத் தமையனான
இவனுக்குக் கொடுத்தால்
தாமும் வறுமைக்கு
அப்பன் சித்தப்பன்
ஆகி விடுவோமோ என்று
பயந்து......

என் அன்னை
இறந்தாள்
இறுதிச் சடங்கிற்கு
இடையறாமல்
கொடுத்து உதவினர்...

கருமாதியில் கட்டாக
வசூலித்துக்கொள்ளலாம்
என்று.....!

கருத்துகள் இல்லை: