சனி, 17 ஜூலை, 2010

அன்னை இல்லம்


திருமணம் ஆகிய
அடுத்த திங்கள்
புதுமனைப்புகுவிழா!
விழாவிற்கு
வந்தவர்களெல்லாம்
வாயாரப் புகழ்ந்தனர்,
வாயில் முகப்பைப்
பார்த்து....
"அன்னை இல்லம்"
என்று அச்சடிப்பதற்கு
முன்னாளே
தன அன்னையை
அனாதை இல்லத்தில்
தள்ளிவிட்டு வந்தான்
புகழுக்குரியவன்......!

கருத்துகள் இல்லை: