சனி, 17 ஜூலை, 2010

யாசகர்கள்....


வறுமை,
அம்மா...
தாயே....
என்ற
அடுக்குமொழிகளின்
ஆசிரியன்.....

இந்தியாவை
இன்னும் ஏழையாக
காண்பிக்கும் ஒரு
பிரகஸ்பதி......

ஆதி அந்தமிலாது
அடக்குமுறைக்குட்படாத
ஓர் அவதிக்குழு...

நம் இந்திய தேசத்
திக்குகளின்
திருஷ்டிபொட்டு ....

வானில் ஒரு
நிலாவென்றால்
வையத்தில் உள்ளது
பலரிடமும் ,
பிச்சைதட்டு

வேகமாய் முன்னேறும்
இந்தியாவின் தோல்விக்கு
வித்திட்ட வேகத்தடை.....

வறுமை கோட்டிற்குக்கீழ்
வாழும் அம்மக்களின்
வயிற்றிலும்
வறுமைக்கோடு....

நம் நாட்டின்
பேருந்துநிலையங்கள் தான்
அவர்களைப் பெற்றுவளர்த்து
வழிநடத்தும்
தலைமை செயலகங்கள்.....

இப்பூலோகத்தில்
வறுமைக்கும் வறுமை
புகட்டும் ஏகாதிபத்தியம்
தலைஎடுக்கப்படும்
தருணம் என்று வரப்போகிறதோ?
தெரியவில்லை......

இனிவரும் காலங்களில்
அணு ஆயுதங்கள் எல்லாம்
அவசியமற்று,
பிச்சக்கலங்களுக்கே
முதலிடம்...
இந்தியாவை
சீர்குலைக்க.......

தயவுசெய்து
இந்தியாவின்
அடையாளசொல்லை
மாற்றுங்கள்...
"யாசகமற்ற தேசகம்" என்று......!

கருத்துகள் இல்லை: