புதன், 11 ஆகஸ்ட், 2010

வறுமை...


தனியொரு மனிதனுக்கு
உணவில்லைஎன்றால்
சகத்தினை அழித்திடுவோம்
என்ற பாரதியின் முடிவுக்கு
முற்றுப்புள்ளி யார்
வைத்தது?
அன்றிலிருந்து இன்றுவரை
நாடு செழிக்கின்றது,
வறுமையில்......

நாட்டிலுள்ளோர் விழிபிதுங்கி
திகைகின்றனர்,
அடுத்த வேலை உணவிற்கு
அதிர்ஷ்டமுள்ளவன் யார் என்று...

எங்கும் நிறைந்துள்ள
காற்றுக்கு ஒப்பாக எம்
நாட்டில் வறுமை....

பச்சிளங்குழந்தையின்
பரிதாப ஏக்கம்,
அம்மா!
என் நெஞ்சு நனைய
ஒரு சொட்டு கண்ணீர்
கூடவா இல்லை?
உன் கண்களில்.?!

குடும்பத்திலோ,
மூத்தவள் பட்டினி
கிடந்தாள் இளையவளுக்கு
மிஞ்சும் இரண்டு பருக்கை
உணவு.....

நாட்டு நடப்பு பேசும்
இதழ்களுக்கு தெரியாது,
வறுமைக்கு வாழ்க்கைப்பட்ட
வள்ளல்களின் வயிற்றுப்பசி...

வறுமை பந்தியில்
வயிற்றுப்பசிக்கு உணவு
என் உமிழ்நீர் மட்டுமே,
என்று பொன்மொழி புகன்று
எதனை வேலைக்குதான்
உமிழ்நீரை உணவாக்கி
உலகத்தை ஏமாற்றும்
போராட்டம்?

வாழ்நாள் முழுதும்
பசிப்பிணியால் விக்கிச்
சாகும் வினோதர்கள்
இன்றும் திரிகிறார்கள்
நம் வறுமை வீதிகளில்....

வறுமையை வெறுமையாக்கும்
ஏகாதிபத்தியம் தலைஎடுக்கப்படும்
தருணம் எது என்றால்?
உலகமே ஊமையாகிறது ,
என் கேள்விக்கு முன்பு....!

1 கருத்து:

ம. ரமேஷ் கவிதைகள் சொன்னது…

இந்தக் கவிதை நன்றாக இருக்கிறது.
www.rameshpoet.blogspot.com