திங்கள், 6 டிசம்பர், 2010

மழை.!!!

மழை ,
களவுற்றுக்
கருத்தரித்த மேகம்
நிலத்தில் ஈன்ற
முதல் குழந்தை....

காற்று மேகத்தைத் துரத்த,
மஞ்சள் நிற மேகம்
தஞ்சம் அடைந்திடும்
கருநீலப்போர்வைக்குள்....

பாரில்,
பசும்புல்லின் தலைமீதில்
மதில்கட்டிச் சதிராடும்
கற்றுக்குமிழே!
கலைகளுக்குள் கட்டுப்படாத
ரசனை நீ!

இந்திரன் செய்த தந்திரத்தால்
இடையறாது சிந்தி
இப்பிரபஞ்சத்தில்
சஞ்சரிக்கும் உனக்காகக்
காத்திருக்கின்றன,
சக்கரவாகப் பறவைகள்.....
வையம்வாழ் மக்கள் வாயில்
புகழிகழ் பெற்று
பெய்யாமல் பெய்யும்
பொற்சொட்டே !

உன்வருகைக்காகக்
காத்திருக்கும் சாலையோரத்
தருக்கள் புத்தளிர்களைத்
துளிர்க்கின்றன....

வாழ்வாங்கு வாழ்ந்து
வானுறைத் தெய்வமாகிய
வள்ளுவரின் வாயும்
வாழ்த்தாத துளியில்லை....

இன்னிசைகள் ஏழென்றால்
உன்னிசையை எட்டாவதாக
இணைக்கவல்லவர் யாரோ?

மழையே!
உன் சொட்டுக்கள்
என் முகப்பருக்கலாகுமானால் ,
மஞ்சளை மறந்திருப்பேன்,
நீ வந்த நாள் முதல்!!!

2 கருத்துகள்:

அரசன் சொன்னது…

//இன்னிசைகள் ஏழென்றால்

உன்னிசையை எட்டாவதாக

இணைக்கவல்லவர் யாரோ?//

மிக அருமையான வரிகள்..

//
மழையே!

உன் சொட்டுக்கள்

என் முகப்பருக்கலாகுமானால் ,

மஞ்சளை மறந்திருப்பேன்,

நீ வந்த நாள் முதல்!!!//

கற்பனையின் உச்சம்..
உங்களின் இந்த வைர வரிகள் தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

க.வனிதா சொன்னது…

நன்றி அரசன் ! உங்களின் வாழ்த்தில் கரைந்தேன் ! இன்னும் படைக்கிறேன் !