செவ்வாய், 7 டிசம்பர், 2010

இன்றைய பெண்.


சென்ற நூற்றாண்டோடு,
கள்ளிசெடிகள் அனைத்தும்
களைஎடுக்கப்பட்டன....
நெல்லுமணி அனைத்தும்
நொறுங்கிபோய் அரிசியாகின....
எருக்கங் கீற்றெல்லாம்
எரிந்துபோயிற்று....

இளைப்பாற இடமற்ற
இவ்வுலகில் விஞ்ஞானத்தோடு
சேர்ந்து மிளிரும் அஞ்ஞானம்
இன்றைய பெண்!

பிரம்மன் எழுதிய அடிமைச்சாசனம்
இந்த நூற்றாண்டோடு
கிழிந்து போனது...

அநியாயச் சூட்டால்
இரத்தம் கொதிக்கும் ,
நரம்புகள் புடைக்கும் ,
ஆண்களின் வீரம்
கைமாறிப்போனது.....

பூமியில் பூத்த பல
பாதரசக் குமிழ்கள்
புத்துயிர் பெற்றுப் பிரகாசிக்கின்றன,
விண்மீன்களோடு சில பெண்மீன்களாய் !

வளரும் இந்தியாவில்
அதீத வளர்ச்சியாய் பல
இந்தியாக்கள் எதிர்நீச்சல் போடுகின்றன ,
சில ஆண்களோடு.....

இந்த அவசர உலகில்
ஆண்களின் அவசிய வேண்டுகோள்,
மறுபிறப்பில் பெண்ணாக
அவதரிக்கவேண்டும் இறைவா... என்று!

அடிமைநாட்கள் எல்லாம்
தனிமை படுத்தப்பட்டு ,
தலைஎழுத்துக்கள் அனைத்தும்
விதியை மாற்ற காற்றோடு
விரைகின்றன....

வரவேற்போம்! வாழ்வளிப்போம் !
வாழ்வோம்!

4 கருத்துகள்:

அரசன் சொன்னது…

நல்லா இருக்குங்க...
வாழ்த்துக்கள்...

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை வாழ்த்துக்கள்

அ.செய்யதுஅலி சொன்னது…

உங்கள் கவிதைகள் எல்லாம் மிகவும் அருமை
காதல் வகிதை எழுதும் பெண்களுக்கிடையில் எழுச்சியூட்டும் வரிகள்
வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்கள் எழுச்சிப் பயணத்தை

க.வனிதா சொன்னது…

நன்றி மிக்க நன்றி! தோழர் செய்தாலி எனக்கு காதல் கவிதைகள் வரமாட்டேங்குது பா ! அதன் இந்தமாதிரி கவிதைகளா எழுதிறேன் !