திங்கள், 20 டிசம்பர், 2010

நீல வானம்!!


வானம்,
வண்ணமாற்றங்களோடு
இயற்கை இயற்றிய
பூமியின் போர்வை!
பகலைத் துரத்தும் மதியும்
இரவைத் துரத்தும் ரவியும்
ஓடிவிளையாடும் ஓர்
ஓடுகளம் நீ!

நீல வானமே,
நீ நிலமகளின்
மடிக்க மாளாத
நீள சேலையா?
விண்மீன் பூக்கள்
பூக்கும் தென்றல்
சோலையா?
அறிய முடியாமல்
அளவற்ற மயக்கத்தில்
முயங்கி நின்று மரமானேன்!

அகிலமே உன் அரவணைப்பில்
அன்பு காண்கிறது!
பல சமயம் அமைதியோடும்!
சில சமயம் ஆரவரத்தொடும்!

ஆகாயமே!
நீ இந்த அவயதுடன்
ஒப்பந்தமிட்ட ஓர்
இலவச உடன்படிக்கை!

பாடும் பறவைகள்
பரவசமாய்ச் சுற்றித்திரிந்து
தன் சிறகைப் பதிக்கும்
உன் வரியற்ற வீதிகளில்....

மண்ணில் ஏவும் செயற்கைகோள்கள்,
விண்ணில் மேவும் இயற்கை கோள்களுடன்
இணைந்து உறவாடி இன்புறுகிறது....

வானமே!
நீ எங்களுக்கு தானமாக
வழங்கப்பட்ட ஓர்
அப்பழுக்கற்ற அரிய சொத்து !
உன்னை மாசுபடுத்தாமல்
மலர்கள் தூவும் காலம் என்றோ?

5 கருத்துகள்:

அரசன் சொன்னது…

அருமையா இருக்குங்க .. வாழ்த்துக்கள்

இக்பால் செல்வன் சொன்னது…

நல்லதொரு கவிதை... உவமைகள் எல்லாம் அழகாய் வந்திருக்கு...

அ.செய்யதுஅலி சொன்னது…

வரிகள் அனைத்தும் ரெம்ப நல்லா இருக்கு

தமிழ்த்தோட்டம் சொன்னது…

படமும் கவி வரியும் அழகு

க.வனிதா சொன்னது…

மிக்க நன்றி நண்பர்களே !