வியாழன், 23 டிசம்பர், 2010

உயிர்..!!!

உயிர்,
உலகேழு அதிசயங்களில்

இணைக்கப்பட மறந்த
இணையில்லா அதிசயம்....

மாயைகளின் பிடியில்
உடல் சிக்கித்தவிக்க,
உடற்ப்பையில் காற்றாய்
உந்தப்பட்டிருக்கிறது....

இப்பிறப்பில் இறைவன்
இனாமாக அருளிய உடலில்,
கடனாக நிரப்பிய காற்றே
உயிர்....
முடியின் முதிர்ச்சி ,
திரையின் தளர்ச்சி,
பற்களின் தற்கொலை,
இவையனைத்தும் ,
தவணை முடிந்துவிட்டது
கடனை திருப்பித் தா! என்று
இறைவன் இடும்
ஞாபகக் கடிதங்கள்!

உயிரே!
நீ திட திரவமற்ற
வாயுவாக இருப்பதால்தான் ,
கைக்குள் சிக்காமல்
சிறு கணத்தில்
ஒரு பிணத்தை வீழ்த்துகிறாய்,
இம்மண்ணில்.....!

இவ்வம்பரத்தில் ஜீவிக்கும்
ஜீவிகளுக்கெல்லாம் நீ
ஜீவனாம்சம் வழங்காவிடில்
எல்லாப் பெயர்களும்
ரணமாகிப் பிணமாகும்
உன்னால்!!!

4 கருத்துகள்:

அ.செய்யதுஅலி சொன்னது…

அருமை அருமை மிகமிக அருமை
சிறந்த வரிகள் நல்ல சிந்தனை

வாழ்த்துக்கள் தோழி

தமிழ்த்தோட்டம் சொன்னது…

அருமை, அருமையான வரிகள் அனைத்தும் நல்ல சிந்தனை வரிகளும்

க.வனிதா சொன்னது…

nandri nanbargale !

அருள்மொழிவர்மன் சொன்னது…

தெளிவான வரிகள், உணரப்பட வேண்டிய உலக அதிசயம் உண்மையே !