புதன், 29 டிசம்பர், 2010

புகை..!


பூமி சுழலும் ஒவ்வொரு
சிறு தருணமும் ,
மனிதமிதவைகள் சில
ஒரு குழலுக்குள்
வாழ்க்கையை முடிக்கும்
பரிதாபம் !!
புகையின் புருஷனே!கேள்!
ஐந்து விரல்களினூடே
ஆறாம் விரலாய் ,
எதற்கு விறகுக்கட்டையைத்
தூக்கிக் கொண்டுத் திரிகிறாய்?
நீ சிறுகச் சிறுகச் சவமாகும்
சாம்பலுக்காகவா?

இரண்டு நிமிட எச்சில் சுகத்திற்கு,
எதற்காக உன் நுரையீரலை
சர்ச்சைக்குள் ஆழ்த்துகிறாய் ?
திரியும் பிணமே !
புகைக்குழலை நீ வாய்க்குள்
புதைத்தால் ,
என் பூவுடலை இப்பூமியில்
புதைப்பார்களடா !

புகைப்பவன் நீ புகைத்தால் ,
வேடிக்கைப் பார்த்த நான் ஏன்
புதைபடவேண்டும் இம்மண்ணில் ?
ஏய் உலகமே!
"புகை உடலிற்கு பகை" என்று
பொன்மொழிகள் பகன்றுவிட்டு
இன்னும் எதற்காக அனுமதிக்கடிதம்
போட்டு ஆமோதிக்கிறாய் ?

எம் நாட்டு இளைஞர்களின்
உயிரை ஒட்டுமொத்தமாக
உறிஞ்சவா ?
நான் இப்போதே உரைக்கிறேன்
என் சகாக்களுக்கு ,
உன்னை விவாகரத்து செய்யும்படி !

5 கருத்துகள்:

கலாநேசன் சொன்னது…

படமும் கவிதையும் அருமை. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

க.வனிதா சொன்னது…

நன்றி கலாநேசன் அவர்களே ! மிக்க நன்றி

அ.செய்யதுஅலி சொன்னது…

நல்ல சமூக சிந்தனை உள்ள அருமையான வரிகள் பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம் சொன்னது…

சமூக சிந்தனையுடன் உங்கள் கவி வரிகள் படத்திற்கு அழகு சேர்கிறது... தொடருங்கள் உங்கள் கவி நடையை

க.வனிதா சொன்னது…

கண்டிப்பாக நீங்கள் படிப்பதர்க்ககவே தொடருகிறேன் !