செவ்வாய், 4 ஜனவரி, 2011

உறவுகள்- ஒரு உண்மை!!


அசையும் அம்பரத்தில்
உறவுகள் எனும் பம்பரத்தைச்
சுழற்றி விளையாடும்
மானுடப் பிரவாகங்களே!

இருக்கும் நிலையை
இழந்து தவிக்கும்
உறவு முடிச்சுகள்
முடித்த உலகம் இது!

முடிந்து போன அத்யாயதிற்கு
முன்னுரை எழுதி பிள்ளையார்சுழி
போட முன்வரும் உறவுகள் ,
கண்ணெதிரே வரும் கண்ணீருக்கு
முற்றுப்புள்ளி வைக்கப் பின்தங்கிப்
போகும் அவலம்!

என்றோ ஒரு நாள்
யாரோ இட்டச் சாபம்
இன்று பணக்கட்டுகளில்
புதைத்து வைத்துள்ளது ,
மனித ஆன்மாக்களை....

தட்டிக்கேட்கும் தருணத்தில்
எல்லாம் ,
கழற்றும் சட்டையென
கழன்ற மனிதநேயம்
சாயம் போய்க்கொண்டிருக்கின்றது !

அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைகளாய்
சுற்றித் திரியும் உறவுகள்
சூழ்ந்த இப்புவியில் ,

குளம் வற்ற நானும் வாடுகிறேன்
என்று குமுறும் ஆம்பல்கள்
இன்றும் தென்படவில்லை
எம் கண்களில்.....

மனமே உணர்ந்திடு !
உறவுகள் அனைத்தும்
தொடர்கதைகளல்ல!
சிட்டாய்ப் பறக்கும்
சின்னஞ்சிறு கதைகளே !

4 கருத்துகள்:

அரசன் சொன்னது…

உண்மைதான் தோழி ,.,,,
உங்கள் வரிகளில் உண்மை தெறிக்கிறது ...
அதே சமயத்தில் கோபம் கொப்பளிக்கிறது ...
வாழ்த்துக்கள் வனிதா

கலாநேசன் சொன்னது…

//முடிந்து போன அத்யாயதிற்கு
முன்னுரை எழுதி பிள்ளையார்சுழி
போட முன்வரும் உறவுகள் ,
கண்ணெதிரே வரும் கண்ணீருக்கு
முற்றுப்புள்ளி வைக்கப் பின்தங்கிப்
போகும் அவலம்//

மிக ரசித்தேன்.

தமிழ்த்தோட்டம் சொன்னது…

//மனமே உணர்ந்திடு !
உறவுகள் அனைத்தும்
தொடர்கதைகளல்ல!
சிட்டாய்ப் பறக்கும்
சின்னஞ்சிறு கதைகளே ! //

உண்மையான வரிகள் அனைத்துமே

இப்படிக்கு அனீஷ் ஜெ சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு... பாரட்டுக்கள்...

<a href="http://anishj.blogspot.com" title="என் கவிதைகளை காண இங்கே கிளிக் செய்யவும்”>இப்படிக்கு அனீஷ் ஜெ</a>