வியாழன், 17 பிப்ரவரி, 2011

வாழ்வின் அத்தியாயம்


அழகிய திருமணத்தில்
அன்பான இரு மனங்களின்
சங்கமம்!

நம் வாழ்க்கையின்
அத்தியாயம் ஆரம்பமாகும்
தருணமிது !

விரியும் அதிகாலைப்பொழுது,
திரியும் குயிற்க்கூட்டங்கள்
இருட்கதவைத் திறக்கும் சூரியக்கைகள்,
இடக்கை தேநீர்க்கோப்பை தாங்க ,
வலக்கை உன் தாள் பற்ற ,
எந்தச் சகுனமும் பாராது,
என்விழிகளை நோக்கும் உன்விழிகள்......

பன்னீரால் ஆனதொரு வெந்நீர் ,
சுகந்தம் வீசும் சவர்க்காரக்கட்டி ,
உதவவரும் என் கரங்கள்
உபயோகமற்றுப் போக,
உன் குளியலில் நனையும் நான் ....

இரவின் நிலவு நிலைத்திருக்க ,
சன்னலில் வீசும் சாமரத்தை
சலனமின்றி சுவாசிக்க உன்
நெஞ்சில் என் தலைசாய்க்கும்
உன் கைகள்.....

வாரம் ஒருமுறை கடற்கரைப்பயணம் ,
கலைந்த உன் தலையைக்கோத
விரையும் என் விரல்,
குளித்த உன் தலைதுவட்ட
என் சேலைநுனி ,
உன் தலை உதிர்த்த தண்ணீர்
என் தாகம்,
என்னிதழீரம் துடைக்க உன்சட்டையின்
கழுத்துப்பட்டை.....
இருளுறையும் நிசப்த காடு,
திசையற்ற ஒற்றையடிப் பாதை ,
நிலவின் நிழல் போர்த்திய மணல் ,
உன் விரல்களினூடே என் விரல்கள்,
காலார நம் பொடிநடை,
காற்றோடு ஒரு கலந்துரையாடல் ....

பாசப்பிணைப்பால் பசியற்ற வயிறு,
பழகாத என் சமையல் ,
ரசித்துப் பரிமாற நான்,
புசித்துப் பசியாற நாம்....

ஆயிரம் வேலையுடன் என் அடுக்களை,
அவசர வேலைகளில் உன் அலுவலகம்,
அலுக்காமல் அன்பைப் பரிமாற
ஆசையாய் தினமொரு முத்தம்....

இதுபோதும் என் வாழ்விற்கு !
என்றும் ,
வளம் சேர்ப்பேன் உன் வாழ்விற்கு !

6 கருத்துகள்:

அரசன் சொன்னது…

ஆசைகளை அடுக்காய்

மிடுக்காய் வார்த்தைகளை

கொண்டு கவி வடித்த

உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் ..

வாழ்த்துக்கள்

க.வனிதா சொன்னது…

நன்றி அரசன் ! மிக்க நன்றி !வாழ்துவதற்க்கேன்றே தனிமனம் படைத்தவர் நீர் !

சி.கருணாகரசு சொன்னது…

ட்திரை காட்சியாய் விரிகிறது உங்க கவிதை.... பாராட்டுக்கள்.

சி.கருணாகரசு சொன்னது…

திரைக்காட்சியாய் விரிகிறது உங்க கவிதை.... பாராட்டுக்கள்.

க.வனிதா சொன்னது…

nandri nanbare ! mikka nandri !

ஆயிஷா சொன்னது…

கவிதை அருமை.வாழ்த்துக்கள்.